
அரசியலுக்குள் தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து அவற்றை கேட்டு இன்பம் அடைகின்றமை குறித்து கவலை அடைகின்றோம். அந்த விடயத்தில் ஒருவரை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது.
அப்போதிருந்த அரசாங்கம் மற்றும் அதில் அங்கம் வகித்த அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
வழக்குகள் தொடர்பாக நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தமையும் தற்போது தெரியவந்துள்ளது.
நீதிமன்றம் மீது வைத்திருந்த கௌரவம், சுயாதீனமாக செயற்படும் என்ற நம்பிக்கை ஒரு சிலரால் தற்போது மழுங்கடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரதம நீதியரசரின் பொறுப்பாகும்.
இதன் ஊடாக நீதிமன்றம் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Leave a Reply