
விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலேயே வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய செயற்பாடுகள் ஊடாக மக்களை கவர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதனால் மக்கள் நிலையான விவசாயத்தை கையில் எடுத்து அதன்மேல் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஆட்சி செயற்பாடுகள் மூலம் பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்த முதலமைச்சர், இப்போது தம்முடைய தனிப்பட்ட செயற்பாடுகள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply