உடல் சூடு குறைய சாப்பிட வேண்டிய உணவுகள்

தர்பூசணி:-

அதிக நீர்ச்சத்து உள்ள பழம் வகையில் தர்பூசணி முதல் இடத்தை பெற்றுள்ளது. எனவே கோடை காலம் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணி பழத்தை அதிகம் வாங்கி சாப்பிடுங்கள். தர்பூசணி சாப்பிடுவதினால் உடல் சூடு தணியும், உடல் வறட்சி நீங்கும்.
வெள்ளரிக்காய்:-

வெயில் காலத்தில் அதிகம் விற்கப்படும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய், வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது, மேலும் வெள்ளரிக்காயில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
எனவே வெள்ளரிக்காய் உடல் சூட்டினை குறைப்பதுடன், செரிமான பிரச்சனையையும் சரி செய்யும்.
முலாம்பழம்:

தர்பூசணிக்கு அடுத்து உடலை நன்கு குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளக்கூடிய பழம் வகைகளில் முலாம்பழம் இடம் பெற்றுள்ளது. அதிக குளிர்ச்சி நிறைந்த பழம் என்பதினால் இந்த முலாம்பழத்தை அளவுடன் சாப்பிட வேண்டும்.
முலாம்பழத்தை அதிகளவு சாப்பிட்டால் காய்ச்சல், இருமல், சளி போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
இளநீர்:-

எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பானம் இளநீர். தினமும் இளநீர் அருந்தி வருவதினால் உடல் சூடு தணியும். சிலருக்கு உடல் இயற்கையாகவே எப்பொழுதும் சூடாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளநீர் பருகிவர உடல் சூடு குறையும்.
நுங்கு:

பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு பனைநுங்கு. நுங்கில் அதிகளவு நீர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
கோடை காலங்களில் அதிகம் விற்கப்படும் நுங்கினை அதிகளவு வாங்கி சாப்பிடுவதினால் உடல் சூடு குறையும், மேலும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
பதநீர்:

பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு இனிப்பான பானம் பதநீர். பதநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், உடல் சோர்வை குறைக்கும். இவற்றில் சுண்ணாம்பு சத்து மற்றும் ஏராளமான கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெந்தயம்:

எந்த ஒரு செலவும் இல்லாமல் உடல் சூட்டை தணிக்க வெந்தயம் ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து, கனிமச்சத்து, இரும்பு சத்து என்று ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டினை குறைக்க தினமும் காலையில் வெந்தயம் கஞ்சி செய்து சாப்பிடலாம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு ஊறவைத்து பின் அந்த நீருடன் வெந்தயத்தை சாப்பிடலாம்.
இவ்வாறு சாப்பிடுவதினால் உடல் சூடு தணியும், செரிமான உறுப்புகளும் சிறக்க செயல்படும்.
நீர் மோர்:-

மோர் குறிப்பாக வயிற்றை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். வெயில் காலத்தில் காரமான உணவுகளை சாப்பிட்டு விட்டால் சிலருக்கு அதிகப்படியான வெற்று வலி ஏற்படும் அல்லது வயிற்று போக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை சரி செய்ய தினமும் காலை வெறும் வயிற்றில் நீர் மோர் அருந்தலாம்.
நீராகாரம்:

கோடைகாலங்களில் தினமும் காலையில் சாப்பிட வேண்டிய மிகவும் அற்புதமான உணவு நீராகாரம். உடல் சூட்டை குறைக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள தினமும் காலை உணவாக நீராகாரம் சாப்பிடுங்கள்.
கம்பங்கூழ்:

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணம் குறைய மற்றும் உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தினமும் காலையில் கம்பங்கூழ் சாப்பிடுங்கள். இதனால் உடல் என்றும் குளிர்ச்சியாக இருக்கும்.