முன் நெற்றியில் 100% முடி வளர வேண்டுமா?

முன் நெற்றியில் முடி வளர என்ன செய்ய வேண்டும்?
ஸ்டேப்: 1
முன் நெற்றியில் முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் இந்த டிப்ஸினை தொடர்ந்து பாலோ செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொள்ளுங்கள்.
பின் இந்த எண்ணெயை சூடு படுத்த வேண்டும் அடுப்பில் நேரடியாக சூடு படுத்துவதற்கு பதில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக சூடேறியதும் பவுலில் ஊற்றி வைத்துள்ள எண்ணெயை பவுலுடன் அப்படியே உள்ளே வைத்து சூடு படுத்த வேண்டும்.
எண்ணெய் சூடேறியதும் அடுப்பில் இருந்து இறக்கி மிதமான சூட்டில் முன் நெற்றி மற்றும் தலை முடியின் வேர் பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள்.
ஸ்டேப்: 2
இரவு முழுவதும் எண்ணெயை வைத்திருந்து மறுநாள் தலை அலசுவதற்கு முன் இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்து விட்டு பிறகு தலை அலச வேண்டும்.
ஹேர் பேக் தயார் செய்வதற்கு 10 சிறிய வெங்காயம், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் வல்லாரை பொடி ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு தலையில் அப்ளை செய்து சிறிது நேரம் காத்திருங்கள் பின் தலைமுடியை நன்றாக அலச வேண்டும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை ட்ரை செய்து வர மிக விரைவிலேயே முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.
மேலும் இந்த டிப்ஸை பாலோ செய்வதுடன் கால்சியம் மற்றும் விட்டமின் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு சாப்பிடுங்கள் இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் தலை முடியின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.