Yarl கதிர்

இணைய பத்திரிகை

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை மியா ஜோர்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை மியா ஜோர்ஜ். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த அவர் அமர காவியம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் பிலிப் என்கிற தொழிலபதிருடன் மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கொரோனா பிரச்சினையால் சில காலம் தள்ளிப்போன திருமணம் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் நடந்தது.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமண நிகழ்ச்சி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!