Yarl கதிர்

இணைய பத்திரிகை

கோவாவில் ஓய்வெடுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக வலம் வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோவாவில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

கோவாவில் ஓய்வெடுக்கும் காட்சியொன்றை அவர்கள்  ஒளிப்படமாக  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

அடிக்கடி எங்காவது வெளிநாடு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன், செல்லும் இடங்களில் எல்லாம்  ஒளிப்படங்களை எடுத்து  பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஓணம் கொண்டாடுவதற்காகவே தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது இந்த காதல் ஜோடி. தற்போது கோவாவில் ஓய்வெடுக்கின்றனர்.

அந்தவகையில் வழக்கம் போல் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‘கட்டாய விடுமுறை நாட்களிலிருந்து விடுமுறைக்கால மூடிற்கு அடியெடுத்து வைத்துள்ளோம். நிஜமாகவே மிக நீண்ட நீண்ட நாட்கள் தான்’ என விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் இந்த ஓய்விற்குப் பிறகு ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!