Yarl கதிர்

இணைய பத்திரிகை

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதமானோர் கூலித் தொழிலாளர்கள்!

செல்வ செழிப்பு மிக்க சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதமானோர் கூலித் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குடியேற்ற தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் நெருக்கமான குடியிருப்புகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் போராடி வருகின்றது.

கட்டுமானம், கப்பல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் சுமார் 3 இலட்சம் தொழிலாளர்கள் இத்தகைய குடியிருப்புகளில் வசிக்கிறார்கள்.

தொழிலாளர்களை தங்க வைப்பதற்கான அனுமதி பெற்ற மற்றும் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களில்கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் இதுவரை 57ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!