Yarl கதிர்

இணைய பத்திரிகை

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – மோடி

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியது.

இந்த கூட்டத்தொடரை இன்று முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை மொத்தம் 18 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது, கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியறுத்தினார்.

கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். என்றும் உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர் என்றும் நாடு ஒன்றுபட்டு இந்திய இராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேநேரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!