Yarl கதிர்

இணைய பத்திரிகை

மலையக தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்? – மனோ கேள்வி

மலையக தமிழ் மக்கள் குறித்து தான் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில், மலையக தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த இரு வாரங்களுக்குள், இரண்டு முக்கிய கோரிக்கைகளை நான் தேசிய அரங்கில் முன் வைத்துள்ளேன்.

ஒன்று, அரசியலமைப்பு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இரண்டு, பெருந்தோட்டங்களை, சிறு தோட்ட முறைமைக்குள் கொண்டுவந்து காணிகள் பிரித்து வழங்கப்படும் உத்தேச திட்டத்தில், தோட்ட தொழிலாளர்களையும் பங்காளிகளாக்க வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாகவும் அரசாங்கம் மெளனமாக இருக்கின்றது. அதைவிட அரசாங்கத்துக்குள் இருக்கும் ஒரு மலையக கட்சி, இதுபற்றி தமக்கு எதுவுமே தெரியாததுபோல், கள்ள மெளனம் காக்கிறது.

இது தொடர்பாக மலையக அரசியல் சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக ஊடக போராளிகள், மலையக பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச மலையக அமைப்புகள் ஆகியோரின் கருத்துகளை அறிய விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!