Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஐ.பி.எல்.: முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் கொல்கத்தா- ஹைதராபாத் மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்திக்கும், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது. ஹைதராபத் அணி பெங்களூர் அணியிடம் தோல்வியை தழுவியது. ஆகவே முதல் வெற்றிகாக இரு அணிகளும் களம் காண்கின்றன.

இதுவரை இரு அணிகளும் 17முறை மோதியுள்ளன. இதில் 7 முறை ஹைதராபாத் அணியும், 10முறை கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளன.

இதேவேளை அண்மையில் நடைபெற்ற கடந்த ஐந்து போட்டிகளில் மூன்றில் ஹைதராபாத் அண வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் வெற்றியை கணிப்பது கடினம். எனவே போட்டியின் முடிவினை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!