Yarl கதிர்

இணைய பத்திரிகை

பிரெக்ஸிற் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் – பிரித்தானிய வணிக அமைப்பு

பிரெக்ஸிற்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியும் மற்றும் செய்யப்பட வேண்டும் என பிரிட்டிஷ் வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக குறித்த அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளுக்கு பிரித்தானியா வைத்திருக்கும் பிரெக்சிற் மாற்றம் காலம் டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைகிறது.

தங்கள் எதிர்கால வர்த்தகத்தை நிர்வகிக்கும் ஒரு ஒப்பந்தத்தை பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு தயாராக இருக்க வேண்டுமானால் ஒக்டோபர் 15 க்குள் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பேச்சுக்கள் சிக்கல்களையும் கருத்து வேறுபாட்டினையும் ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக மீன்பிடித்தல் உட்பட சில பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.

அடுத்த உத்தியோகபூர்வ சுற்று பேச்சுவார்த்தை செப்டம்பர் 28 அன்று மீண்டும் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!