Yarl கதிர்

இணைய பத்திரிகை

சீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் – ராஜ்நாத் சிங்

சீன இராணுவத்துக்கு இணையான பலம் கொண்டது இந்திய இராணுவம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பா.ஜ.க. சித்தாந்தவாதி தீனதயாள் உபாத்யாய பிறந்ததினத்தையொட்டி, ராஜஸ்தான் மாநில கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய அவர், 2020ம் ஆண்டில் சமபலத்துடன், சீன இராணுவத்தை இந்திய இராணுவம் எதிர்கொண்டுள்ளதாக கூறினார்.

அதேபோல், சீன இராணுவத்தின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் இந்திய இராணுவத்தால் தகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லடாக் எல்லையில் பல்வேறு மலைபகுதிகளை இந்திய இராணுவம் பிடித்து வருவதோடு, முன்னேறி வந்தால் சுடத் தயங்க மாட்டோம் எனவும் சீன இராணுவத்துக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!