Yarl கதிர்

இணைய பத்திரிகை

மன்னாரில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் பொலிஸாரினால் மீட்பு

மன்னார்- பெரிய கரிசல் பகுதியில் வாகனமொன்றில் பதுக்கி வைத்திருத்த 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பேசாலை விசேட புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவிலுள்ள பெரிய கரிசல் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) திடீர் சோதனை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வாகனமொன்றில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில், அவற்றை பேசாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுமார் 1024 கிலோ 200 கிராம் மஞ்சள் மூடைகள் இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், ஒரு மாதத்தில் 3 மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பிடிக்கப்பட்டு உள்ளதாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜித் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!