Yarl கதிர்

இணைய பத்திரிகை

பிரபல பாடகர் குமார் சானுவுக்கு கொரோனா தொற்று!

பிரபல பொலிவூட் பாடகர் குமார் சானுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக சானுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குமார் சானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாரா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், குமார் சானு விரைவில் குணமடைய வேண்டி அவரது இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொலிவூட் சினிமாவின் முன்னணிப் பாடகர்களுள் ஒருவரான குமார் சானு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், ‘சாஜன்’ என்ற ஹிந்திப் பட தமிழ் டப்பிங் படத்தில் தமிழில் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!