Yarl கதிர்

இணைய பத்திரிகை

2-3 வாரங்களில் அரசாங்கத்தை அமைப்போம் – ஜெசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்தின் ஆளும் தொழிற்கட்சித் தலைவர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஒரு அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்திருந்த அவர் பசுமைக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

சனிக்கிழமையன்று நடந்த ஒரு பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற ஆர்டெர்ன், நாட்டின் ஆளுநர் ஜெனரல் டேம் பாட்ஸி ரெட்டிக்கு தனது கட்சிக்கு அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் திறன் இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.

நாட்டில் ஒரு புதிய சமூக தொற்று நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ள போதும் எந்தவொரு புதிய கொரோனா கட்டுப்பாடுகளையும் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!