Yarl கதிர்

இணைய பத்திரிகை

கொரோனா அச்சம் – 2781 குடும்பங்களுக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு

கம்பஹாவில் 2781 குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவர்களில் 876 பேர் மினுவாங்கொடையை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்கு 5 மில்லியனை ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் அத்தியாவசிய பொருட்களையும் வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு பிரதேச சபை பிரிவுக்கும் குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!