Yarl கதிர்

இணைய பத்திரிகை

மேலுமொரு ஆடைத்தொழிற்சாலையின் ஊழியருக்கு கொரோனா!

கஹாதுடுவ பகுதியில் அமைந்துள்ள ஹைத்ராமணி ஆடைத் தொழிற்சாலையின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம், குறித்த அதிகாரிக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பாக கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தேவைக்கேற்ப தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!