Yarl கதிர்

இணைய பத்திரிகை

தளபதி 65 படத்தில் இருந்து விலகினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?

தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் 65வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் குறித்த படத்தை  முருகதாஸ் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தில் இருந்து விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தியமையினால் அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்திலிருந்து விலகிவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!