Yarl கதிர்

இணைய பத்திரிகை

வரலாறுச் சாதனை படைத்தது சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையட்டுக் கழக அணி

கே.ஸி.ஸி.ஸி. விளையாட்டுக் கழகம் நடத்தும் 27 வருடமாக நடத்தும் 40 பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட  கே.ஸி.ஸி.ஸி வெற்றிக் கிண்ணத்துக்கான கடினப்பந்து துடுப்பாட்டத் தொடரில் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

கொக்குவில் இந்துக்கல்லூரி,  மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் .கே.ஸி.ஸி.ஸி. விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையட்டுக் கழக அணி மோதியது.
நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற  கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தனர்.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய  கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணியினர் 33 பந்துப் பரிமாற்றங்களில  சகல இலக்குகளையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக  அணி   சார்பாக பிரவின் 18 ஓட்டங்களையும், சாம்பவன். பிரதீஸ் ஆகியோர் 17ஓட்டங்களையும், அதிகபடியாக பெற்றனர்.
பந்துவீச்சில் சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பாக பிரதீஸ் 3 இலக்குகளையும் பிரசாந், செந்தூரன்ஆகியோர் தலா 2 இலக்குகளையும்  விஐயகுமார், பிரியன்  ஆகியோர் ஒரு இலக்கை,யும் சாய்த்திருந்தனர்.
120 ஓட்டங்களை பெற்றால் வெற்றி யென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடியசுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழக அணியினர் 28 2 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்கினை இழந்து  120  ஓட்டங்களை பெற்று 7 இலக்குகளால் வெற்றிபெற்றது.
பிரியங்கன் 54 ஓட்டங்களையும் பிரசாந் 35 ஓட்டங்களையும் செந்தூரன் 12ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக
அணி சார்பாக  சாம்பவன் 2இலக்குகளையும் கிருசிகன்  ஒரு இலக்கையும் சாய்த்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!