Yarl கதிர்

இணைய பத்திரிகை

உலக கிரிக்கெட் இரசிகர்களின் உள்ளங்களை வென்ற மகத்தான சாதனை நாயகன் சங்காவுக்கு பிறந்தநாள்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஆதவன் தெரிவித்துக்கொள்கின்றது.

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான சங்கா, இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் சமூகவலைதளத்தின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரான சங்கா, 134 டெஸ்ட் போட்டிகளில் 12,400 ஓட்டங்களையும், 404 ஓருநாள் போட்டிகளில் 14,234 ஓட்டங்களையும், 56 ரி-20 போட்டிகளில் 1,382 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!