Yarl கதிர்

இணைய பத்திரிகை

வடக்கு அயர்லாந்தில் கடுமையான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

வடக்கு அயர்லாந்தில், இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டுள்ள இரண்டு வார ‘சர்க்யூட் பிரேக்கர்’ கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

ஒரு சர்க்யூட்-பிரேக்கர் என்பது தொற்றுநோயின் அலைகளைத் திருப்பி, தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு இறுக்கமான கட்டுப்பாடுகள் ஆகும்.

இந்த கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய சில்லறை விற்பனையாளர்களை மூடுமாறு கூறப்பட்டுள்ளது. அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் எடுத்துச் செல்லும் சேவையை மட்டுமே வழங்க முடியும்.

சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் போன்ற நெருங்கிய தொடர்பு சேவைகளும் மூடப்படவேண்டும்.

இந்த கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை 00:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தன, டிசம்பர் 11ஆம் திகதி 00:01 வரை அமுலில் இருக்கும்.

அதாவது, வடக்கு அயர்லாந்து மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு மாறும். பாடசாலைகள் திறந்த நிலையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!