பிரித்தானியாவில் நேற்று மட்டும் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 45 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31 இலட்சத்து 64 ஆயிரத்து 51 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை மேலும் 1,243 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 83 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் இதுவரை 14 இலட்சத்து 6 ஆயிரத்து 967 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 16 இலட்சம் பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.