மெக்ஸிக்கோவில் 1,314 பேர் உயிரிழப்பு, 14, 395 பேருக்கு தொற்று உறுதி !

மெக்ஸிக்கோவில் கொரோனா தொற்றினால் இன்று புதிதாக 1,314 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 35 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை மேலும் 14 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்து 56 ஆயிரத்து 28 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.