சீரற்ற காலநிலை காரணமாக யாழில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரனமாக யாழ் மாவட்டத்தில் 525 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ். குடாநாட்டில் பெய்த மழை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, காரைநகர் பிரதேசத்தில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.