கொரோனா தொற்றில் இருந்து மேலும் 646 நோயாளர்கள் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 646 நோயாளர்கள் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 49 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 26 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.