சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக சிரேஸ்ர வீரர் அணி வெற்றி பெற்றது.

வதிரி டயமன்ஸ், வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ர வீரர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக சிரேஸ்ர வீரர் அணி வெற்றி பெற்றது.
(20 ) திகதி சனிக் கிழமை வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் மாலை 5 மணியளவில் இடம்பெற்ற .ஆட்டத்தில் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ர வீரர்கள்’ அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக சிரேஸ்ர வீரர்கள்’ அணி மோதிக் கொண்டன. இதில்
2:1 என்ற கோல் கணக்கில் யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் சிரேஸ்ர வீரர்கள்’ அணி வெற்றி பெற்றது.
