தாவடி காளிஅம்பாள் பிறிமியர் லீக் கால்பந்து தொடரில் ஸ்பிற் போயிஸ் அணியை வெற்றி கொண்டது கிங்ஸ் போயிஸ் அணி

தாவடி காளிஅம்பாள் விளையாட்டு கழகம் வீரர்களுக்கு இடையில் நடத்தும் தாவடி காளி அம்பாள் பிறிமியர் லீக் கால்பந்து தொடரில் தாவடி கிங்ஸ் போயிஸ் அணி வெற்றி பெற்றது.
(23) திகதி செவ்வாய்க் கிழமை தாவடி காளிஅம்பாள் விளையாட்டு கழக மைதானத்தில் மின் ஒளியில் 7 மணிக்கு இடம் பெற்ற தாவடி கிங்ஸ் போயிஸ் அணிக்கும், தாவடி ஸ்பிற்போயிஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் தாவடி கிங்ஸ் போயிஸ் அணி 1:0 என்ற கோல்_கணக்கில்_வெற்றி_பெற்றது.