ரவ்பாயேல் மகாராஜா வெற்றிக் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரில் ஜொலிஸ்ரார் அணியை வீழ்த்தி கே.கே.எஸ் அணி இறுதிக்குள் நுழைந்தது.

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தினால் வருடத்தம்
பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக் இடையில் நடத்தும் 2020/21ஆண்டுக்கான ரவ்பாயேல் மகாராஜா வெற்றிக் கிண்ணத் துக்கானகூடைப்பந்தாட்டத்தொடரில் ஆண்கள் பிரிவு அணிகளுக்கான அரையிறுதியாட்டத்தில் கே.கே.எஸ்விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.


பழைய பூங்காவில் அமைத்துள்ள யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டதிடலில் (23) திகதி செவ்வாய்க்கிழமை 7.30 மணிக்கு மின் ஒளியில் இடம் பெற்ற அரையிறுதி
ஆட்டத்தின் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.கே.எஸ் விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டது.

இதில் கே.கே.எஸ் விளையாட்டுக் கழக அணி 95: 73 : என்ற புள்ளி அடிப் படையில் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது.