Yarl கதிர்

இணைய பத்திரிகை

சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் 30 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடர் ஆட்டம் ஒன்றில் சென்ற லைட்ஸ்விளையாட்டுக்கழக அணி 117 ஓட்டங்களால் வெற்றி பெற்றது 

(20) திகதி சனிக்கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டத்தில் சென்றல்லைட்ஸ் விளையாட்டுக்கழக அணி எதிர்த்து ரெயின்போ விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டது.
முதலில் துடுப்பெடுத்து விளையாடிய சென்றலைட்ஸ்விளையாட்டுக்கழக அணி  30 பந்துப் பரிமாற்றங்கள்  நிறைவில் 9 இலக்கினை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 
இதில்சாரங்கன்27ஓட்டங்களையும் பிரியலக்சன்34 ஓட்டங்களையும், டார்வின்33ஓட்டங்களையும் தமது அணி  சார்பாக பெற்றனர். 

பந்துவீச்சில்  ரெயின்போ விளையாட்டுக் கழக அணி சார்பில் ஜெயசிங்க3 இலக்கினையும், குகசதுஸ் யதுஷன்ஆகியோர்தலா 2இலக்கினையும் வீழ்த்தினர்.

262 ஓட்டங்களை பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய ரெயின்போ விளையாட்டுக் கழக அணி 29 .2  பந்துப் பரிமாற்றங்கள்  நிறைவில் சகல  இலக்கினை இழந்து 144 ஓட்டங்களை மட்டும்  பெற்றுக் கொண்டது. 
இதில்டிலிசன்35 ஓட்டங்களையும், சிம்சன் 20 ஓட்டங்களையும், செந்துரன்18  ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. 

பந்து வீச்சில் சென்றலைட்ஸ்  விளையாட்டுக் கழக அணி சார்பில் நிஷன் 3இலக்கினையும், நிரேஷன் ,விஐஸ்காந் ஆகியோர் தலா 2 இலக்கினையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்வீருதை சென்றலைட்ஸ்  விளையாட்டுக் கழக அணி வீரர் சாரங்கன் பெற்றுக் கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!