Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஹார்ட்லியன் அணி 31ஓட்டங் களால் வெற்றி பெற்றது.

ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் 30 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடர் ஆட்டம்ஒன்றில் ஹார்ட்லியன் விளையாட்டுக்கழக அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது 

(20) திகதி சனிக்கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் மதியம்  இடம்பெற்றஆட்டத்தில் றைட்ரென் விளையாட்டுக்கழக அணி எதிர்த்து ஹார்ட்லியன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டது.
முதலில் துடுப்பெடுத்து விளையாடிய ஹார்ட்லியன்ஸ் விளையாட்டுக்கழக அணி 27 பந்துப் பரிமாற்றங்கள்  நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 152  ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 
இதில் சகிர்த்தியன் 47ஓட்டங்களையும், புருஸ் சோர்த்மன்15 ஓட்டங்களையும் ,நிரஷன்11 ஓட்டங்களையும் தமது அணி  சார்பாக பெற்றனர். 
பந்துவீச்சில்  றைரேடன்
விளையாட்டுக் கழக அணி சார்பில் நந்தகுமார் 3 இலக்கினையும், செந்தூரன், திலக்சன்ஆகியோர் தலா2 இலக்கினையும் வீழ்த்தினர்.
153  ஓட்டங்களை பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய றைரேடன்
 விளையாட்டுக் கழக அணி 25.3  பந்துப் பரிமாற்றங்கள்  நிறைவில் சகல  இலக்கினை இழந்து 121 ஓட்டங்களை மட்டும்  பெற்றுக் கொண்டது. 
இதில்சதீஸ்காந்32 ஓட்டங்களையும், மதுஷாந் 18 ஓட்டங்களையும், உதய ஷாந்18  ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. 
பந்துவீச்சில் ஹார்ட்லியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் தினோசன் 4 இலக்கினையும், சகிர்த்தியன் 3இலக்கினையும்  வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்வீருதை ஹார்ட்லியன் ஸ் விளையாட்டுக் கழகஅணிவீரர் சகிர்த்தியன்  பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!