Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஸ்கந்தா ஸ்ரார் துடுப்பாட்டத் தொடரில் யூனியன் 7இலக்கினால் வெற்றி பெற்றது

ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் 30 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடர் ஆட்டம்ஒன்றில் யூனியன் விளையாட்டுக்கழக அணி 3 இலக்கினால்  வெற்றி பெற்றது 

(21) திகதி ஞாயிறறுக் கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் காலை   இடம்பெற்ற ஆட்டத்தில் யூனியன்விளையாட்டுக்கழக அணி எதிர்த்து ஜொனியன்ஸவிளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டது.

முதலில் துடுப்பெடுத்து விளையாடிய ஜொனியன் ஸ் விளையாட்டுக்கழக அணி 29.4 பந்துப் பரிமாற்றங்கள்  நிறைவில் சகல இலக்கினையும் இழந்து 167  ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இதில் கிசான்துயன்  70ஓட்டங்களையும், செளமியன் 26 ஓட்டங் களையும், பிரியதர்சன் 18 ஓட்டங் களையும் தமது அணி  சார்பாக பெற்றனர். 

பந்துவீச்சில்  யூனியன் 
விளையாட்டுக் கழக அணி சார்பில் மோகன்ராஜ்3 இலக்கினையும், பிரவின் 2இலக்கினையுமவீழ்த்தினர்

170  ஓட்டங்களை பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய யூனியன் 
 விளையாட்டுக் கழக அணி 22.1  பந்துப் பரிமாற்றங்கள்  நிறைவில் 3  இலக்கினை இழந்து 170 ஓட்டங்களைப்  பெற்றுக் கொண்டது. 

இதில் மோகன்ராஜ் 59 ஓட்டங்களையும், அகிசன் 47ஓட்டங்களையும், பிரசாந்
21ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணி சார்பில் செளமியன் 3இலக்கினை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்வீருதை யூனியன்  விளையாட்டுக் கழக அணிவீரர் மோகன்ராஜ்  பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!