ஸ்கந்தா ஸ்ரார் துடுப்பாட்டத் தொடரில் விக்ரோறி 4இலக்கினால் வெற்றி பெற்றது.

ஸ்கந்தா ஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்தும் 30 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடர் ஆட்டம்ஒன்றில் விக்ரோறி விளையாட்டுக்கழக அணி 3 இலக்கினால் வெற்றி பெற்றது.
(22) திகதி ஞாயிறறுக் கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் மதியம் இடம்பெற்ற ஆட்டத்தில் விக்ரோறி
விளையாட்டுக்கழக அணி எதிர்த்து நீயூஸ்ரார்விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டதுமுதலில் துடுப்பெடுத்து விளையாடிய நீயூஸ்ரார் விளையாட்டுக்கழக அணி 30 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்கினையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் ரம்மியராகுல் 73 ஓட்டங்களையும், பிரசாந் 30 ஓட்டங் களையும், எஸ். பிரசாந் 12 ஓட்டங் களையும்,
தமது அணி சார்பாக பெற்றனர்.
பந்துவீச்சில் விக்ரோறி
விளையாட்டுக் கழக அணி சார்பில் ஐங்கரன்3 இலக்கினையும், சரத்2இலக்கினையுமவீழ்த்தினர்.185 ஓட்டங்களை பெற்றால் வெற்றியென பதிலுக்கு துடுப்பெடுத்து விளையாடிய விக்ரோறி விளையாட்டுக் கழக அணி 25.3 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்கினை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் சரத் 38 ஓட்டங்களையும், திரேசன்
36ஓட்டங்களையும், பத்மபிரியன் 30 ஓட்டங் களையும், பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நீயூஸ்ரார் விளையாட்டுக் கழக அணி சார்பில் ராாகுல், எஸ்.பிரசாந் ஆகியோர் தலா 2 இலக்கினை வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்வீருதை நீயூஸ்ரார் விளையாட்டுக் கழகஅணிவீரர் ரம்மிய ராகுலன் பெற்றுக் கொண்டார்.
