யாழில் covid-19 இன் அதித ஆட்டம். பிற்போடப்பட்டது வொலிபோல் லீக் ஆட்டம்.
யாழ்.மாவட்டகரப்பந்தாட்ட சங்கத்தின்ஏற்பாட்டில்கடந்த வாரம்ஆரம்பிக்கப்பட்டஜப்னா வொலிபோல் லீக் தொடர் யாழ் குடாநாட்டில் திடீரென ஏற்பட்ட covid-19 தாக்கத்தினை அடுத்து சமூகப்பொறுப்பினை உணர்ந்து அனைவரினதும் நலன்கருதி Jaffna Volleyball Leagueபோட்டித்தொடரானது மறு அறிவித்தல் இன்றி பிற்போடப்படுவதாக யாழ் மாவட்டகரப்பந்தாட்ட சங்கத்தின்தலைவர்ஆ.ரவிவர்மன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் கூறுகையில் யாழ் குடா நாட்டில் கடந்த இரு நாட்களில் பல covid 19 தொற்றாளர்கள்அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், எமக்கு இருக்கும் சமூகப் பொறுப்பினை உணர்ந்தும் வீரர்கள்,அணிஅலுவலர்கள் மத்தியஸ்தர்கள்என அனைவரினதும் பாதுகாப்பை க்கருதி
JaffnaVolleyballLeague போட்டித்தொடரானது மறு அறிவித்தல் இன்றி பிற்போடப்படுகின்றது. எனவும் அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களில் போட்டிகளினை மூடிய போட்டிகளாக(ரசிகர்களிற்கு அனுமதியின்றி)இறுக்கமான சுகாதார நடை முறைகளினை பின் பற்றி தீர்மானிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்” என்றார்.