Yarl கதிர்

இணைய பத்திரிகை

இடைநிறுத்தப்பட்ட ஆட்டங்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளினைப் பின்பற்றி மீண்டு ஆரம்பம்

யாழ் குடாநாட்டில் திடீரென ஏற்பட்ட covid-19 தாக்கத்தினை அடுத்து இடைநிறுத்தப்பட்ட யாழ்.மாவட்டகரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற ஜப்னா வொலிபோல் லீக் தொடர னாது மீண்டும் எதிர்வரும் ( 3) திகதி சனிக்கிழமை இறுக்கமான சுகாதார நடைமுறைகளினை பின்பற்றி மீண்டு ஆரம்பமாகின்றது. இதில் 12 வீரர்கள் மற்றும் 5 அணி அலுவலர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்என யாழ்.மாவட்டகரப்பந்தாட்ட சங்கத்தினார் அறிவித்துள்ளனா.போட்டிகள் 3.04.2021 சனிக்கிழமை ஆவரங்கால் மத்திய விளையாட்டுகழக மைதானம் இடம் பெறவுள்து. இதில் காலை 10. மணிக்கு இடம் பெறும் முதலாவது ஆட்டத்தில் மட்டுவில் ஸ்பைக்கேர்ஸ் அணியை எதிர்த்து ஸ்புட்னிக் நோர்த் போல் அணி மோதவுள்ளது.பிற்பகல் 2. மணிக்கு இடம் பெறும் இரண்டாவது ஆட்டத்தில் 
சங்கானை மக்கள் ஒன்றிய சலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து  ஆவரங்கால் கிங்ஸ் பைற்லரஸ் அணி மோதவுள்ளது. மாலை 4. மணிக்கு இடம் பெறும் மூன்றாவது ஆட்டத்தில் 
வல்வை வெலி வோரியஸ் அணியை எதிர்த்து  றைசிங் ஐஸ்லன்ட் அணி மோதவுள்ளது.இரவு 6.30 மணிக்கு இடம் பெறும் நான்கவது ஆட்டத்தில் 
அரியாலை கில்லாடிகள் 100 அணியை எதிர்த்து அச்சுவெலி சென்றல் ஸ்பைக்கர் அணி மோதவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!