Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஜின்னா, கலைமகள், இளந்தளிர் விக அடுத்த சுற்றுக்கு முன்னேறின

பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்டத அணிகளுக்குஇடையிலான FA கிண்ணத்துக்கான  கால்பந்தாட்டத்தொடரில் 
ஜின்னா,கலைமகள்,இளந்தளிர் விளையாட்டுக் கழக அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின .
சனிக்கிழமை   பூநகரி  நண்பர்கள் விளையாட் டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற ஆட்டங்களில் ம முதலாவதாக இடம் பெற்ற ஆட்டத்தில் செந்தாரகை விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஜின்னா விளையாட்டுக்கழக அணி மோதிக்கொண்டது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலினை பதிவு செய்ததினால்ஆட்டம்சமநிலையில்முடிவடைந்தது வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கு

சமநிலை தகர்ப்பு உதை கள் வழங்கப்பட்டது.இதில்ஜின்னா

விளையாட்டுக்கழக அணி 7:6 என்ற

.கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில்
கலைமகள்விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து குழந்தை யேசு விளையாட்டுக்கழக 
அணி மோதிக் கொண்டன. இதில்  கலைமகள் விளையாட்டு கழக அணி  7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இளந்தளிர் விளையாட்டு கழகஅணியை எதிர்த்து .சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக் கொண்டன. இதில் இளந்தளிர் விளையாட்டுக்கழக அணி எதிராக 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!