Category: இலங்கை
-
வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ள மிச்செல் பெச்சலட்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று முன்வைக்கவுள்ளார். அது தொடர்பில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூலமான முன்வைப்புகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க உள்ளார். இதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நாளையதினம் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சந்திக்க உள்ளார். இதற்கிடையில் இலங்கை இணை அனுசரனை வழங்கிய யோசனைகளிலிருந்து விலகி கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் […]
-
இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிப்பு
கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்த நாட்டின் சோல் நகரிலுள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகளுக்கு அண்மையில் தொழில்புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோம் நகரில் உள்ள இலங்கைக்கான பதில் தூதுவர் சிசிர செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு தூதரகம் […]
-
ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நுகோகொடை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண் தெரிவித்த அவர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் […]
-
தமிழ் இளைஞன் மீது காதல்..! முஸ்லிம் பெண்ணை கிளிநொச்சியிலிருந்து கடத்தி சென்ற 9 போ் கைது
கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து திருகோணமலைக்கு இளம் பெண்ணை கடத்தி சென்ற 4 பெ ண்கள் உள்ளிட்ட 9 கடத்தல்காரா்களை ஓமந்தை சோதனை சாவடியில் இராணுவம் முற்றுகையிட்டு கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண்ணையும் மீட்டுள்ளனா். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவர் (முஸ்ஸிம்) தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே சண்டைகள் இடம்பெற்றுள்ளன. காதலுக்கு […]
-
கொரோனா வைரஸினால் இத்தாலியில் அதிகரிக்கும் உயிரிழப்பு: இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை !
இத்தாலியில் கோரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்க்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை உரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் ரோமில் உள்ள தூதரகம் மற்றும் மிலனில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் தகவல்களின் படி, எந்த இலங்கையர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 1 இலட்சத்து 4,000 க்கும் மேற்பட்ட […]
-
இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது!
இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் தென்கிழக்கில் உள்ள துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே இந்த மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த மீனவர்கள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குப் […]
-
மூன்று மணல் களஞ்சியசாலைகள் முற்றுகை – ஒருவர் கைது
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமளவிலான மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூன்று களஞ்சியசாலைகள் வவுணதீவு விஷேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகையின்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதிப் பிரதேசத்திலுள்ள கொடுவாமடு கித்துள் ஆகிய இடங்களில் இந்த மணல் களஞ்சியசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 159 கியூப் மணல் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். தொல்பொருள் ஆய்வு நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுணதீவு […]
-
கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென அக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை […]
-
யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் தினமும் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. இதுவரை காலமும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே விமான சேவைகள் இடம்பெற்றுவந்த நிலையில் எதிர்வரும் வாரத்தில் 7 நாட்களும் சேவையை ஆரம்பிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார். […]