Category: உலகம்
-
கொரோனா தாக்கம் : உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இதனைத் தெரிவித்துள்ளார். பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என மருத்துவத்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கொரோனா […]
-
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்தநிலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா […]
-
சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை!
சீனாவில் விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயர் சட்டமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸினால் கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவில் கடந்த ஜனவரி மாத ஆரம்ப காலப்பகுதியில் இருந்து விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனாவில் உத்தியோகபூர்வமாக விலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 […]
-
தென்கொரியாவில் 169 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிப்பு!
தென்கொரியாவில் 169 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குவைத்தில் புதிதாக இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா வைரஸினால் குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக பஹ்ரேனில் பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு […]
-
டெல்லியில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் – பிரதமர்
டெல்லியில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜ நிலை திரும்ப பொலிஸ் மற்றும் பல அமைப்புகள் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர். அமைதியும் நல்லிணக்கமுமே நமது நெறிமுறைகளுக்கு மையமாக உள்ளது. அனைத்து நேரங்களிலும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர வேண்டும் என டெல்லியில் உள்ள எனது சகோதர, […]
-
ஈரானிய கப்பல்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை!
ஈரானிய கப்பல்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாகவே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த […]
-
சிறைச்சாலையையும் விட்டு வைக்காத கொரோனா..!: 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சீனாவில் உள்ள சிறைச்சாலைகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. அந்தவகையில், கொரோனா வைரஸின் பிறப்பிடமான ஹுபெய் மாகாணத்திலுள்ள சிறைச்சாலைகளில் 271 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 200 கைதிகள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை, ஜெஜியாங் மாகாணத்தின் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு […]
-
கொரோனாவால் சீனாவுக்கு வெளியே 19 உயிரிழப்புகள்
கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 78,773 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,462 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 23,188 பேர் குணமடைந்து உள்ளதுடன், 11,553 பேர் ஆபத்தான நிலையலும் உள்ளனர். சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் (என்.எச்.சி) கருத்துப்படி, சனிக்கிழமையன்று சீனாவில் 97 புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அவற்றில் ஒரு உயிரிழப்பு மாத்திரம் ஹூபேக்கு வெளியே […]
-
ஜெனீவா செல்லும் திருமாவளவன் உள்ளிட்ட தமிழக முக்கிஸ்தர்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பந் ஆகியோர் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். அத்துடன் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி, சேவியர், இளம்பரிதி, ஆகியோரும் வைத்தியர் தாயப்பன் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு, மஹாராஷ்ரா மாநிலத்தினைச் சேர்ந்த வழக்கறிஞர் நிலேஷ்யுக்கி ஆகியோரும் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அடுத்து வரும் நாட்களில் செல்லவுள்ளனர். […]
-
கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த பல பிராந்தியங்களை தனிமைப்படுத்திய இத்தாலி!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகையானது இத்தாலியில் 79 ஆக உயர்வடைந்துள்ளமையினால், அந் நாட்டு பிரதமர் கியிசெப் கோன்டே நேற்று சனிக்கிழமை அவசரகால திட்டத்தை அறிவித்துள்ளார். இத்தாலியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தாலியின் லோம்பார்டி மற்றும் வெனெட்டோவின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் சுமார் 50,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இத்தாலியில் கொரோனா பரவியுள்ள மேற்படி பகுதிகளுக்கு சிறப்பு […]