Yarl கதிர்

இணைய பத்திரிகை

அஜித்தின் 60வது படத்தில் முக்கிய காரணத்துக்காக நடிக்க மறுக்கும் பிரபல நடிகர்- மாஸா இருந்திருக்குமே?

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி மறுபடியும் இணைந்துள்ளனர்.

படத்தின் பூஜையின் போதே வலிமை என்ற பெயரையும் படக்குழு அறிவித்துவிட்டனர். இப்படத்திற்காக அஜித் பிட்டாக மாற நேரம் எடுப்பதால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்த நிலையில் தான் படம் குறித்து ஒரு தகவல். அதாவது தனி ஒருவன் என்ற படம் மூலம் வில்லனாக கலக்கிய நடிகர் அரவிந்த் சாமியை தல 60யில் நடிக்க கேட்டுள்ளனர்.

ஆனால் மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

அஜித்துடன் மட்டும் இவர் நடித்தால் செம மாஸாக இருக்குமே என ரசிகர்கள் வருந்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!