Yarl கதிர்

இணைய பத்திரிகை

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்று பகல் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களை சேர்ந் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்க்பபட்டள்ளதாக குறித்த புள்ளி விபர த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும், 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அவதானிப்புக்களில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!