Yarl கதிர்

இணைய பத்திரிகை

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற எத்தியோப்பிய பிரதமர்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018 அன்று பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்த அவர் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!