Yarl கதிர்

இணைய பத்திரிகை

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக சரிவு

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக குறைத்தது சர்வதேச நாணய நிதியம் குறைத்து கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப், 2019-20 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும் என்று கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்த நிலையில், தற்போது 1.2 சதவீதம் குறைத்துள்ளது.

கடந்த 2018-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக இருந்து கவனிக்கத்தக்கது. வளர்ச்சி விகிதத்தில் ஏறத்தாழ 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் வேகமான பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா தக்க வைத்துள்ளது.

கார்ப்பரேட் வரி குறைப்பு போன்ற திட்டங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்றும் பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

சீனாவை பொருத்தவரை, 2018-ல், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 5.8 சதவீதமாக மேலும் குறையும் என்றும் பன்னாட்டு நிதியம்தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!