Yarl கதிர்

இணைய பத்திரிகை

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீனா அதிபர்

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வமன்ற விஜயத்தை முடித்துக்கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று (சனிக்கிழமை) மாலை நேபாளத்தைச் சென்றடைந்தார்.

காத்மண்டு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நேரில் சீன அதிபரை வரவேற்றார்.

அங்கு சிகப்பு கம்பளத்துடன் கூடிய வரவேற்பின்போது முப்படையினரின் அணிவகுப்பை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.

நேபாளம் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை சந்திக்கும் ஷி ஜின்பிங் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் மற்றும் நேபாளத்துக்கு இடையில் சுமார் 20 ஆயிரம் கிலோமீற்றர் நீளம் கொண்ட எல்லைப்பகுதியில் திபெத் விடுதலைக்காக போராடிவரும் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களில் சிலரை சீனாவுக்கு நாடு கடத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!