Yarl கதிர்

இணைய பத்திரிகை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் சில அதிகாரிகள் இரகசிய பேச்சுவார்த்தை

முன்னாள் இராணுவ உயர் அதிகாரியொருவரும், அரச சார்பற்ற அமைப்பின் பிரதானி ஒருவரும் பொறியியலாளர் ஒருவரும் சென்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரி சி.ஐ.ஏ.அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனம் ஒன்றுடன் நீண்டகாலம் பணியாற்றிய ஒருவர் என புலனாய்வுத் துறை தகவல்கள் தெரிவிப்பதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் முன்னாள் இராணுவத் தளபதி, வடக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் இருவருடன் நீண்டகாலம் மிக நெருங்கிய தொடர்பு வைத்தவர் எனவும்  அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!