Yarl கதிர்

இணைய பத்திரிகை

உச்சபட்ச சில்லறை விலையில் அரிசியை விநியோகிக்க தீர்மானம்!

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி உச்சபட்ச சில்லறை விலையில் அரிசியை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்தில் உள்ள அரிசியை சதொச விற்பனை நிலையங்களினூடாக சந்தைக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களினூடாக கடந்த பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் குறித்த களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!