Yarl கதிர்

இணைய பத்திரிகை

உள்ளூராட்சித் தோ்தலைச் சந்திக்க தி.மு.க தயார்- வைகோ

தமிழகத்தில் உள்ளூராட்சித் தோ்தலைச் சந்திக்க தி.மு.க.வும் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் தயாராக உள்ளதாக ம.தி.மு.க.பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க.தான் தேர்தலை தாமதப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றதெனவும் வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும்  உள்ளூராட்சித் தோ்தலைச் சந்திப்பதற்கு தி.மு.க.தயாராகதான் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கோட்டாபய  ராஜபக்ஷ,  தம்மை ஏமாற்றுவதற்காகத் தமிழா்களின் படகுகளை விடுவிக்கிறேன் என்று சொல்கிறாா்.  அந்தவகையில் பிரதமா் மோடிக்கு ம.தி.மு.க.சாா்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!