Yarl கதிர்

இணைய பத்திரிகை

என்மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது – ரிஷாட்

இலங்கையில் நீதியும் நியாயமும் இருக்குமானால், தன்மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் சிங்கள மொழி சார்ந்த இலத்திரனியல் ஊடகங்களை திறந்தால் எனது பெயரே அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

சி.ஐ.டி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு புதுப்புது போலிக் குற்றச்சாட்டுக்களுடன் சென்று குற்றச்சாட்டுக் கோவைகளை கையளிப்பதும் அதனை ஒளிப்பதிவாக்கி ஊடகங்களிலே பிரபல்யப்படுத்துவதுமே இவர்களின் நாளாந்த வாடிக்கையாகிவிட்டது .

19 வருட நாடாளுமன்ற வாழ்விலே எத்தனையோ, பொய்க் குற்றச்சாட்டுக்களும் அபாண்டங்களும் புனை கதைகளும் என்மீது சுமத்தப்பட்டபோதும் எந்தவொரு குற்றச்சாட்டும் இதுவரை விசாரிக்கப்படவுமில்லை. நிரூபிக்கப்படவுமில்லை.

ஏனெனில் அந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு உண்மையும் இருக்கவில்லை. அதேபோன்று இன்னும் நீதி வாழ்கின்றது என நாம் எல்லோரும் நம்பினால் இனியும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கவும் முடியாது. தண்டனை வழங்கவும் முடியாது” என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!