Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஏப்ரல் 25 இல் இலங்கை நாடாளுமன்ற தோ்தல்!

நாடாளுமன்றத்தை 2020 மாா்ச் மாதம் முதல் கிழமை கலைத்தால் ஏப்ரல் மாதம் 25ம் திகதி பொது தோ்தலை நடாத்தலாம் என தோ்தல் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் யாப்புக்கு அமைய நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் கலைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க தபால் மூல வாக்களிப்பு சந்தர்ப்பத்தை வழங்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவா் கூறியுள்ளார்.

அதேபோன்று தனது இராஜினாமா தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிாிய கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!