Yarl கதிர்

இணைய பத்திரிகை

கனடா உயர்ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon)  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில், இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி, உயர்ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர்ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜியாங்கோவும் (Wu Jianghao) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!