Yarl கதிர்

இணைய பத்திரிகை

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வான்பாய ஆரம்பித்துள்ள குளங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிரித்துள்ளதுடன் ஒரு சில நீர்பாசன குளங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்பாசண குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதுவரைவரை 25.2 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்து காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும், புது முறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

குடமுருட்டி குளம் (08அடி), பிரமந்தனாறுகுளம்(12அடி), வன்னேரிக்குளம் (09.06அடி), 24 அடிகொண்ட கல்மடுகுளம் ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி 10.06அடிகொண்ட கனகாம்பிகைக்குளம் 10.1 அடியாக அதிகரித்துள்ளது. குறித்த இன்று இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்பாசண பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குளங்களின் கழிவுநீர் ஆற்றுப்பகுதியை அண்மித்துள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

தற்போதும் குளங்களிற்கான நீர் வருகை தொடர்ந்தும் காணப்படும் நிலையில் குளங்கள் நிரம்பி வருவதாகவும், மழை பெய்யும் சந்தர்ப்பங்கள், நீர் நிலைகளில் நீராட செல்லுதல், சிறார்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது. இயலுமானவரை மக்கள் அவதானத்தடன் செயற்படுமாறும், மழை காலங்களில் தவிர்க்க வேண்டி விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து மக்களிற்கான தேவைகள் மற்றும் பாதுகாப்புக்களை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார். மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அவதான்துடன் மக்களை செயற்படுமாறும் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!