Yarl கதிர்

இணைய பத்திரிகை

கோட்டாவின் வெற்றிக்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணித்துள்ளனர்- பசில்

நாட்டின் எதிர்கால நலன்களை கருத்திற்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்காக நாட்டு மக்கள் அனைவரும் தங்களை அர்ப்பணித்துள்ளனரென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் எங்களது ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அத்துடன் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து செயற்றிட்டங்களும் இனி முன்னெடுக்கப்படும்.

நாங்கள் எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த வெற்றியை அடைந்துள்ளோம். எனவே அனைத்து மக்களும் இந்த வெற்றியை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.

அத்துடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!